×

எம்எல்ஏக்களுக்கு பேரம் விவகாரம்; டெல்லி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்: ஆம்ஆத்மி அரசுக்கு நெருக்கடி

புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஆம்ஆத்மி அமைச்சருக்கும் போலீஸ் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஏழு எம்எல்ஏக்களை, தலா ரூ. 25 கோடிக்கு பாஜக பேரம் பேச முயன்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீசார் குழு, நேற்று ஐந்து மணி நேரப் பரபரப்புக்கு பிறகு அவரிடம் நோட்டீசை அளித்தனர். அதில், இது தொடர்பாக மூன்று நாள்களில் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ெடல்லி காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாங்கள் அவருக்கு (கெஜ்ரிவாலுக்கு) நோட்டீஸ் அளித்துள்ளோம். அவர் எழுத்து வடிவில் மூன்று நாட்களில் பதில் அளிக்கலாம்’ என்றனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டில் தொடர்புடையதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், ெடல்லி கல்வி அமைச்சருமான அதிஷிக்கு குற்றப்பிரிவுத் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. இன்று காலை அதிஷியின் வீட்டுக்குச் சென்ற குற்றப்பிரிவு போலீசார் இந்த நோட்டீஸை வழங்கினர். பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். தொடர்ந்து அமைச்சர் அதிஷி, ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா ஆகியோர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்றனர். அவர்கள் காவல் துறையின் நோட்டீஸ் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது குற்றப்பிரிவு போலீசின் சம்மன்கள் டெல்லி ஆளும் ஆம்ஆத்மி அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

The post எம்எல்ஏக்களுக்கு பேரம் விவகாரம்; டெல்லி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்: ஆம்ஆத்மி அரசுக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Aamatmi Government ,New Delhi ,Aamatmi ,Samman ,Kejriwal ,Delhi ,Am Aadmi Party ,BJP ,Crisis ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...